விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது பாதி கிணற்றை கடந்து, பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வரும் இந்த ஷோவில் இப்பொழுது டிக்கெட் டு பினாலே நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் டாஸ்க்கில் விஷ்ணு வெற்றி பெற்று 3 பாயிண்டுகளை பெற்ற நிலையில் தற்போது இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் டிக்கெட் டு பினாலேக்கான இரண்டாவது ரவுண்டு நடைபெறுகிறது.

அதாவது பிக்பாஸ் கொடுத்திருக்கும் கார்டில் வரும் விதிமுறைகளை பயன்படுத்தி முயலை அடைய வேண்டும் என்பது தான் டாஸ்க். அப்படி கார்டில் கொடுத்த விதிமுறைகளை வைத்து முன்னேறி செல்லும் நிலையில், ரவீனா நேற்று போல் டாஸ்க்கில் எலிமினேட்டான நிலையில் அர்ச்சனாவையும் வெளியேற்றும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது. இந்த டாஸ்க்கில் யார் வெற்றி பெறுகிறார்கள் என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

நாளை மின்தடை பகுதிகள் (28.12.2023) ! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *