
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 8:
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி தற்போது 56 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இதுவரை 7 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி இருக்கும் நிலையில், கடைசியாக சிவாஜி பேரன் சிவகுமார் வெளியேறினார். மேலும் இந்த ஷோ முடிய இன்னும் ஒரு மாதம் இருப்பதால் போட்டி கடுமையாக இருந்து வருகிறது.
பிக்பாஸ் சீசன் 8 பிரபலம் தூக்கிட்டு தற்கொலை – அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!
மேலும் இந்த ஷோவுக்கு பின்னாடி நெறய பேர் வேலை செய்து வருகிறார்கள். குறிப்பாக இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், அசோசியேட் இயக்குனர்கள் என அந்நிகழ்ச்சிக்கு பின்னால் 500க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்? … ரசிகர்களுக்கு காத்திருக்கும் Mass ட்ரீட்!
அதாவது, பிக்பாஸ் சீசன் 8ல் அசோசியேட் இயக்குனராக பணியாற்றி வந்தவர் தான் ஸ்ரீதர். நேற்று மாலை அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் அவரின் இந்த முடிவிற்கு, குடும்ப பிரச்சனை காரணமாக இந்த முடிவை எடுத்தாரா அல்லது ஏதேனும் கடன் பிரச்சனையா என்ற கோணத்தில் போலீஸ் விசாரித்து வருகிறது. இன்னும் அந்த ஷோ முடிய கூட இல்லை அதற்குள் ஒருவர் இறந்த சம்பவம் பிக்பாஸ் குழுவுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்