சின்னத்திரை நடிகர் விஜே விஷாலுடன் டேட்டிங் செய்த பிக்பாஸ் 8 போட்டியாளர் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 8 போட்டியாளர்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஏழு சீசன்களை வெற்றிகரமாக ஓடி முடிந்த நிலையில் தற்போது எட்டாவது சீசன் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இதை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் நடைபெற்ற டோல் டாஸ்கில் ஜெஃப்ரி வெற்றி பெற்று கேப்டனாக பொறுப்பேற்றார்.
இதனை தொடர்ந்து இந்த வாரம் Angels vs Devils டாஸ்கில் போட்டியாளர்கள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். இதனால், ஆட்டம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. போட்டியாளர்களும் அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இந்நிலையில் இந்த ஷோவில் முக்கிய போட்டியாளராக இருந்து வரும் விஜே விஷால் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளருடன் டேட்டிங் செய்ததாக சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விஜே விஷாலுடன் டேட்டிங் செய்த பிக்பாஸ் 8 போட்டியாளர் – யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!
புஷ்பா 2 பார்க்கச் சென்ற பெண் மரணம் – தீவிர சிகிச்சையில் குழந்தைகள் !
அதாவது, விஜே விஷால் தற்போது தர்ஷிகாவை ரூட்டு விட்டு வருகிறார். இவர்கள் காதல் ஜோடியாக இருந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு செல்ல இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் விஜே விஷால், பிக்பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன்னர், பிக்பாஸ் ஷோவில் இருந்து வெளியேறிய வர்ஷினி உடன் டேட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்