பிக்பாஸ் சீசன் 8ல் பங்கேற்கும் முக்கிய போட்டியாளர்கள்? இனி சிரிப்புக்கு சண்டைக்கும் பஞ்சம் இருக்காது!!பிக்பாஸ் சீசன் 8ல் பங்கேற்கும் முக்கிய போட்டியாளர்கள்? இனி சிரிப்புக்கு சண்டைக்கும் பஞ்சம் இருக்காது!!

BIGG BOSS 8: பிக்பாஸ் சீசன் 8ல் பங்கேற்கும் முக்கிய போட்டியாளர்கள்: விஜய் டிவியில் ஒன் ஆப் தி பேவரைட் ஷோவாக மக்கள் மத்தியில் விளங்கி வருவது என்றால் அது பிக்பாஸ் தான். ஆரம்பத்தில் இந்த ஷோ குறித்து எந்த ஐடியாவும் இல்லாமல் இருந்த மக்களிடையே இவ்வளவு வரவேற்பு கிடைத்ததற்கு முக்கிய காரணம் உலக நாயகன் கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கிய இந்த ஷோ கிட்டத்தட்ட ஏழு சீசன்கள் முடிவடைந்துள்ளது.

தற்போது எட்டாவது சீசன் விரைவில் ஆரம்பமாக இருக்கும் நிலையில், அதற்குள்ள ரசிகர்களின் தலையில் இடியை இறக்கியது போல ஒரு தகவலை கமல் அறிவித்தார். அதாவது பிக்பாஸ் ஷோவில் தான் விலக போவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து அவருடைய இடத்திற்கு யாரை கொண்டு வரலாம் என்று விஜய் டிவி பயங்கரமாக வேலை பார்த்து வருகிறது.

பிக்பாஸ் சீசன் 8ல் பங்கேற்கும் முக்கிய போட்டியாளர்கள்

தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் பிக்பாஸ் சீசன் 8 ஷோவை தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Also Read: The Greatest of All Time Trailer ரிலீஸ் – டபுளாக வந்து மிரட்டிய தளபதி – ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இருக்கு!!

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ” விஜய் டிவியின் நம்பர் 1 டிஆர்பி ஷோவான பிக்பாஸ் சீசன் 8ல் குக் வித் கோமாளி சீசன் 5ல் கலக்கிய ஷாலின் ஜோயா கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. இவர் அப்படி பங்கேற்றால் கண்டிப்பாக இந்த சீசனில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது.

அவரை தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்த அருணும், வில்லியாக நடித்த ஃபரினா ஆசாத்தும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஃபரினா இருப்பதால் கண்டிப்பாக வாக்குவாதம் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. சோசியல் மீடியா பிரபலம் அமலா ஷாஜியும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் குக் வித் கோமாளி சீசன் 2வில் எல்லாரு மனதையும் கொள்ளை கொண்ட அஸ்வின் குமார் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அவர் கலந்து கொண்டால் அவருக்கு ஏற்றார் போல் ஒரு நடிகையை களமிறக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

அவர்களுக்குள் காதல் மலரவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்படி போடு… இது தான்யா Weekend

எதிர் நீச்சலை தொடர்ந்து சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது

“தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது?

சமந்தாவின் மாஜி கணவனுக்கு 2வது திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *