
விஜய் டிவி டிஆர்பியில் நம்பர் ஒன் ஷோவாக இருந்து வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8. பிக்பாஸ் ஷோவை புதிதாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் இந்த ஷோவில் கடந்த வாரம் சிவகுமார் எலிமினேட் ஆகி சென்றார். மேலும் விஜய் டிவியை பொறுத்த வரை டிஆர்பிக்காக எந்த லெவலுக்கு வேணா போவார்கள் என்று எப்போதும் மக்களின் கருத்தாக இருந்து வருகிறது.
பிக்பாஸ் உடன் தொக்க மாட்டிய விஜய் சேதுபதி – TRP-க்காக அரசாங்க உத்தரவை மீறிய விஜய் டிவி!
அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதாவது, சமீபத்தில் பெஞ்சல் புயல் ஏற்பட்டு சென்னையை புரட்டி போட்டு விட்டு போய்விட்டது. புயலுக்கு முன்பே மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் வேலை பார்ப்பவர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்குமாறு அரசாங்கம் தெரிவித்து இருந்தது. கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விஜய் சேதுபதி போட்டியாளர்களை ரோஸ்ட் செய்து உள்ளார்.
பிரபல நடிகை சோபிதா தூக்கிட்டு தற்கொலை – திரையுலகில் பெரும் அதிர்ச்சி!
இப்படி இருக்கையில் பிக் பாஸ் ஷூட்டிங்கில் பொதுமக்கள் கலந்து கொண்டதுதான் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அது எப்படி அரசாங்கம் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று சொல்லியும் சாமானிய மக்களை நிகழ்ச்சிக்கு அழைத்து உட்கார வைத்திருப்பார்கள் என்று தொடர்ந்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த காரணத்தை வைத்து VJS யை ரோஸ்ட் செய்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்