பிக் பாஸ் 8ல் களமிறங்கும் வாரிசு நடிகை - அது யார் என்று தெரியுமா? சவுண்டு சரோஜாவாக கலக்கியவர்!பிக் பாஸ் 8ல் களமிறங்கும் வாரிசு நடிகை - அது யார் என்று தெரியுமா? சவுண்டு சரோஜாவாக கலக்கியவர்!

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கும் பிக் பாஸ் 8ல் வாரிசு நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் களமிறங்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 8:

விஜய் டிவியில் நம்பர் ஒன் ஷோவாக கருதப்படும் பிக்பாஸ் ஷோவின் சீசன் 8 வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக ஆரம்பிக்க இருக்கிறது. இந்த ஷோவை முதன் முதலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். இதனால் இந்த ஷோவின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

நிகழ்ச்சி தொடர இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் ஷோவில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்து தகவல்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் இருக்கிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில், டிஎஸ்கே, சீரியல் நடிகர் VJ விஷால், சீரியல் நடிகை தர்ஷா குப்தா, VTV கணேஷ், CWC புகழ் சுனிதா, மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சஞ்சனா, CWC அன்ஷிதா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இப்படி இருக்கையில் இந்த ஷோவில் ஒரு வாரிசு நடிகையும் கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பழம்பெரும் நடிகை லட்சுமி அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா பாஸ்கரன் என்பவரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோயினாக நடித்து வந்த இவர், போக போக மார்க்கெட் இறங்கி சைடு கேரக்டரில் நடித்து வந்தார்.

பிக் பாஸ் 8ல் வாரிசு நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன்

CWC 5ல் டைட்டில் வென்ற பிரியங்கா – மணிமேகலை போட்ட அதிரடி பதிவு – என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

இப்பொழுது அம்மா, மாமியார் கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது எந்த பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த இவர் பிக்பாஸ் ஷோவை வைத்து தனது செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. சவுண்டு சரோஜாவாக நம்மை மெய்சிலிர்க்க இவர், பிக்பாஸ் வீட்டிற்குள் சவுண்ட் விடுகிறாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.  

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

நடிகர் கோவிந்தா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது

ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி

அஜித் மடியில் உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா

CWC சீசன் 5 மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த “மிஸ் மேகி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *