Home » சினிமா » பிக்பாஸ் 8ல் இருந்து எலிமிட்டான ஜாக்குலின்..,  வெயிட்டான சம்பளத்தை கொடுத்த BIGGBOSS!!!

பிக்பாஸ் 8ல் இருந்து எலிமிட்டான ஜாக்குலின்..,  வெயிட்டான சம்பளத்தை கொடுத்த BIGGBOSS!!!

பிக்பாஸ் 8ல் இருந்து எலிமிட்டான ஜாக்குலின்..,  வெயிட்டான சம்பளத்தை கொடுத்த BIGGBOSS!!!

விஜய் டிவி பிக்பாஸ் 8ல் இருந்து எலிமிட்டான ஜாக்குலின் வாங்கிய சம்பளம் விவரம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கடைசி வாரம் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் மொத்தம் 6 போட்டியாளர்கள் பைனலை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அவர்களுக்காக வெளியேறிய மற்ற போட்டியாளர்களையும் உள்ளே இறக்கி உள்ளார் பிக்பாஸ். மேலும் ஆட்டத்தை சூடு படுத்தும் விதமாக பைனலிஸ்ட் 6 பேருக்கு பணப்பெட்டி டாஸ்க் கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

பொதுவாக வழக்கமாக வீட்டுக்கு ஒரு பெட்டி அனுப்பப்படும். அதை எடுக்கும் போட்டியாளர்கள் வீட்டை விட்டு செல்வார்கள். இது தான் முந்தைய சீசன்களில் இருந்தது. ஆனால் தற்போது மாற்றப்பட்டு போட்டியாளர்கள் கதவை தாண்டி ஓடிச்சென்று பெட்டியை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் பிக்பாஸ் வீட்டுக்குள் வர வேண்டும் என்று டாஸ்க் கொடுத்துள்ளார். அதன்படி,  முதலில் 50 ஆயிரத்திற்கான டாஸ்கை முத்துக்குமரன் வெற்றி பெற்றார். இதையடுத்து, 2 லட்சத்தை ரயானும், 2 லட்சத்தை பவித்ராவும், 5 லட்சத்தை விஷாலும் வென்றார்.

அதன்பின்னர், 8 லட்சத்துக்கான டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் ஜாக்குலின் கலந்து கொண்டார். அதன்படி, 35 விநாடிகளில் பணப்பெட்டியை எடுத்துவிட்டு உள்ளே வர வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பெட்டியை எடுத்து விட்டு வர  37 விநாடிகள் எடுத்துக் கொண்டதால், துரதிர்ஷ்டவசமாக ஜாக்குலின் இந்த ஷோவை விட்டு எலிமினேட் ஆனார். இப்படி 8 லட்சத்தை தவறவிட்டு ஜாக்குலின் வெளியேறி சென்றாலும் கூட, அவருக்கு பிக் பாஸ் செம வெயிட்டான தொகையை சம்பளமாக கொடுத்துள்ளார். அதன்படி, அவர் 101 நாட்கள் அந்நிகழ்ச்சியில் இருந்ததால் அவருக்கு மொத்தமாக ரூ.25 லட்சத்து 25 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

பிக்பாஸ் வீட்டுக்குள் தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யா.., வெளியான ஷாக்கிங் வீடியோ!!

அஜித்தின் விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்.., சுட சுட வெளியான குட் நியூஸ்.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!

நடிகை நிதி அகர்வால்விற்கு கொலை மிரட்டல்.., மர்ம நபர் செய்த தகாத செயல்!!!

விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ரம்பா?… எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top