குக் வித் கோமாளி ஷோவில் பங்கேற்கும் பிக்பாஸ் Bully Gang - அப்ப ஏதோ ஒரு சம்பவம் இருக்கு?., போட்டோ வைரல்!!குக் வித் கோமாளி ஷோவில் பங்கேற்கும் பிக்பாஸ் Bully Gang - அப்ப ஏதோ ஒரு சம்பவம் இருக்கு?., போட்டோ வைரல்!!

விஜய் டிவி குக் வித் கோமாளி சீசன் 5ல் பிக்பாஸ் மாயாவின் Bully Gang-ல் ஒருவர் கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் தொலைக்காட்சியில் மிகவும் பேமஸான ஷோ என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. இது குறித்து ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் வெங்கடேஷ் பட் இந்த ஷோவில் இருந்து விலகியதால் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அவர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும் விதமாக புதிதாக என்னமா ராமர் கோமாளியாக களமிறங்க இருக்கிறார். இதனால் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் இந்த ஷோவில் விஜே பிரியங்கா, பிக்பாஸ் விஷ்ணு, தினேஷ், இர்பான் போன்ற பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, குக் வித் கோமாளி சீசன் 5ல் பிக் பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவி கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.  

எம்ஜிஆர் நெருங்கிய நண்பரும் மூத்த அரசியல்வாதியுமான  ஆர்.எம்.வீரப்பன் காலமானார் – அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *