பிக்பாஸ் ராஜுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட் - இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?பிக்பாஸ் ராஜுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட் - இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

BIGG BOSS பிக்பாஸ் ராஜுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்: விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் மக்களை அதிகம் கவர்ந்த ஷோ என்றால்  அது உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த ஷோவில் கலந்து கொண்ட பல பேர் தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

அதன்படி கவின் மற்றும் ரியோ  தற்போது அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ராஜுவும் அந்த லிஸ்டில் வர இருக்கிறது. இத்தனை நாள் காமெடியனாகவும், குணச்சித்திர நடிகராகவும் இருந்து வந்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: ‘இந்தியன் 2’ படத்திற்கு எதிராக களமிறங்கும் ‘டீன்ஸ்’ – பிரம்மாண்ட இயக்குனருடன் மோதும் பார்த்திபன்!!

அதாவது ராகவ் மிர்தாத்  இயக்கி வரும்  ‘பன் பட்டர் ஜாம்” என்ற படத்தில் தான் ராஜு ஹீரோவாக நடித்து வருகிறாராம். மேலும் அவருடன் சேர்ந்து ஆதியா பிரசாத் மற்றும் பவ்யா திரிகா  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் Gen Z இளைஞர்களைப் பற்றிய கதையாக உருவாகி வரும் இந்த படத்தை சுரேஷ் சுப்பிரமணியன் என்பவர் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில்   ‘பன் பட்டர் ஜாம்” படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் பிக் பாஸ் ராஜுவின் லேட்டஸ்ட்  புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் நம்ம ராஜுவா இது? என்று வாயை பிளந்து வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *