பிக்பாஸ் சீசன் 8ல் நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் ஏற்பட்ட சண்டை காரணமாக மருத்துவமனையில் ராணவ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 8:
உலகின் மிகவும் புகழ்பெற்ற ஷோ தான் பிக் பாஸ். இந்த ஷோ ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அதன்படி தற்போது தமிழில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கடந்த 2 வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. இதில் ஆனந்தி, சாச்சனா மற்றும் சத்யா, தர்ஷிகா ஆகியோர் எலிமினேட்டாகி வெளியே சென்றார். இதன் காரணமாக தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றனர். இன்னும் சில நாட்களில் பைனல் வர இருப்பதால், அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதனை தொடர்ந்து இந்த வாரம் இந்த வாரம் நடைபெற்ற ஓபன் நாமினேஷனில் அனைத்து போட்டியாளர்களும் நாமினேட் ஆகி உள்ளனர். விஷால் கேப்டன் என்பதாலும், ஜெஃப்ரி நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வென்றதாலும் அவர்கள் இருவர் மட்டும் நாமினேட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில், இந்த வாரம் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில், போட்டியாளர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள கற்களை ஒருவர் உதவியுடன் காப்பாற்ற வேண்டும் என்று கொடுக்கப்பட்டது. பவித்ராவும் ஜெஃப்ரியும் ஒரு அணியாக சேர்ந்து செயல்பட்டனர். அப்போது, அவர்களிடம் இருக்கும் கல்லை ராணவ் எடுக்க முயற்சி செய்யும் பொழுது, ஜெஃப்ரி ராணவ்வை கீழே தள்ளி விட்டதில் ராணாவுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் பிக்பாஸ் ராணவ் – ரெட் கார்டு வாங்கி வெளியேறும் ஜெஃப்ரி?
45 வயதில் ஹீரோவாகும் காமெடி நடிகர் – சமீபத்தில் தாத்தாவான பிரபலம்!
ஆனால் அவர் நடிக்கிறார் என்று போட்டியாளர்கள் கிண்டல் செய்த போது, அருண் அவரிடம் சென்று கேட்ட போது, உண்மையில் அவருக்கு காயம் ஏற்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, ராணவ்வை சக போட்டியாளர்கள் இணைந்து கன்பெஷன் ரூமுக்குள் அழைத்துச் செல்கின்றனர். இந்த ப்ரோமோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், மருத்துவர் அவரை மூன்று வாரம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அவர் பிக்பாஸ் வீட்டை வெளியேறி விடுவார் என கூறப்படுகிறது. மேலும் அவரை கீழே தள்ளிவிட்ட ஜெஃப்ரிக்கு விஜய் சேதுபதி ரெட் கார்டு கொடுப்பாரா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர்?.., 55 லட்சத்தை தட்டி தூக்கிய போட்டியாளர்!!
படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த் – பெரிய ஹைப்பை எகிறவிட்ட சண்முகபாண்டியன்!!
டைவர்ஸ் செய்யும் பிக்பாஸ் பிரபலம் – அடக்கடவுளே இந்த ஜோடியும் பிரிய போகுதா?
2 கோடிக்கு போட் ஹவுஸ் வாங்கிய ஆல்யா மானசா – பிசினஸில் மாஸ் காட்டுறாரேப்பா!