Home » சினிமா » ஜெயம் ரவியுடன் நடித்த பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா? கோவா டீமோட மெயின் பில்லர்!!

ஜெயம் ரவியுடன் நடித்த பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா? கோவா டீமோட மெயின் பில்லர்!!

ஜெயம் ரவியுடன் நடித்த பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா? கோவா டீமோட மெயின் பில்லர்!!

பிரபல நடிகர் ஜெயம் ரவியுடன் நடித்த பிக்பாஸ் பிரபலம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர், தற்போது ஜீனி, காதலிக்க நேரமில்லை, JR34 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க  இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பிரதர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

மேலும் அவரின் சினிமா கெரியரில் எத்தனையோ படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் இவரும் அண்ணனும் சேர்ந்து பண்ண படங்கள் பட்டிதொட்டியெல்லாம் பேசப்பட்டது. அந்த வகையில் தற்போது தனி ஒருவன் 2 திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் கூட்டணியில் அதிகம் பேசப்பட்ட திரைப்படம் தான் உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து திரிஷா, பிரபு, சந்தானம், மணிவண்ணன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர்.

மேலும் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவை. அதில் ஒரு பாடல் தான், கிளியே கிளியே சாங். இந்த பாடலில் த்ரிஷாவை தேடி ஜெயம் ரவி போவார். அப்போது மாட்டு வண்டியில் ஒரு சின்ன பையன் அமர்ந்திருப்பான். அவர் யாரு தெரியுமா. அந்த சிறுவன் தற்போது பிக்பாஸ் சீசன் 8ல் ஒரு போட்டியாளராக இருந்து வரும் ராயன் தான் அது. அதை அவரே ஒரு எபிசோடில் கூறியிருப்பார். அதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

நடிகர் விவேக் இறப்புக்கு இதான் காரணம்? மனைவி அதிர்ச்சி தகவல்!!

கலகலப்பு பட நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

விஷால் நடிப்பில்  “மார்க் ஆண்டனி 2” – VISHAL போட்ட மாஸ்டர் பிளான்!!

ஹீரோவாகும் பிக்பாஸ் சரவண விக்ரம்.., ஹீரோயின் யார் தெரியுமா?.., புகைப்படம் வைரல்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top