அடேங்கப்பா.., பிக்பாஸ் சனம் ஷெட்டியின் காதலனா இவரு?.., காதலர் தினத்தில் வெளியான முக்கிய போட்டோ!!அடேங்கப்பா.., பிக்பாஸ் சனம் ஷெட்டியின் காதலனா இவரு?.., காதலர் தினத்தில் வெளியான முக்கிய போட்டோ!!

விஜய் டிவியின் பேமஸ் ஷோவான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை சனம் ஷெட்டி. அவர் தொடக்கத்தில் மாடலிங் செய்து வந்த நிலையில் படிப்படியாக படங்களில் நடிக்க வாய்ப்பை பெற்றார். கிட்டத்தட்ட 10 வருடங்களாக சினிமா துறையில் இருந்து வரும் தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்தார். இருப்பினும் அவருக்கு பிக்பாஸ் ஷோ தான் கை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். அதன்பிறகு ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த  அவர், தொடர்ந்து பிக்பாஸ் ஷோவை குறித்து விமர்சித்து வந்தார்.

அவர் அந்த ஷோவில் கலந்து கொண்ட பொது நடிகர் தர்ஷனை காதலித்து வருவதாக கூறி வந்த நிலையில், வெளியே வந்த பிறகு இருவரும் பிரிந்து சென்று விட்டனர். இந்நிலையில் இன்று காதலர் தினத்தன்று சனம் ஷெட்டி ஒரு நபருடன் போட்டோ எடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் ஓஹோ இவர் தான் பிக்பாஸ் சனம் ஷெட்டியின் புதிய காதலரா? என கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால் அது மெல்வின் என்பவருடன் ஒரு பாடலில் அவர் நடித்த போது எடுக்கப்பட்ட டீசர் வீடியோ தான் என்று தெரிய வந்துள்ளது. 

மளமளவென சம்பளத்தை கூட்டிய லவ்வர் மணிகண்டன்.., அடேங்கப்பா., இத்தனை கோடியா?.., கோலிவுட்டில் லீக்கான தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *