பிக்பாஸ் சீசன் 8 தொடங்கும் தேதி இதுதான் - வெளியான முக்கிய தகவல்!!பிக்பாஸ் சீசன் 8 தொடங்கும் தேதி இதுதான் - வெளியான முக்கிய தகவல்!!

பிக்பாஸ் சீசன் 8 தொடங்கும் தேதி இதுதான்: விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் இருந்தாலும் கூட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். ஆரம்பத்தில் இந்த ஷோவை பற்றி புரிந்து கொள்ளாமல் இருந்து வந்த மக்கள், வீட்டுக்குள் நடந்த சண்டை அழுகை சந்தோஷம் போன்றவைகளை பார்த்து பேவரைட் ஷோவாக மாறியது.

அதனால் தான் 7 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது பிக்பாஸ் 8வது சீசனுக்கான வேலைகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 7 சீசன்களை சிறப்பாக தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் ஷோவை விட்டு வெளியேறுவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், இப்பொழுது அவருக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஷோவை தொகுத்து வழங்க இருப்பதாக விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. vijay tv

பிக்பாஸ் சீசன் 8 தொடங்கும் தேதி இதுதான்

அதன் ப்ரோமோவும் சமீபத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8 எப்போது தொடங்க இருக்கிறது என்பது குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. vjs

Also Read: பிரபல தயாரிப்பாளர் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம் – யார் தெரியுமா?

அதாவது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன் முதலாக தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 8 தமிழில் அடுத்த மாதம், அக்டோபர் 13ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வந்திருக்கிறது. மேலும் அதற்கான ப்ரோமோ அடுத்த வாரம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது

விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்

விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *