நடிகை வனிதா விஜயகுமார் தனது குடும்பத்தை குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
பிக்பாஸ் வனிதா விஜயகுமார்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சர்ச்சை நடிகையாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் வனிதா விஜயகுமார். தற்போது டிவி, யூடியூப் என பிசியாக இருந்து வரும் இவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில வருடங்களாக இவரை சினிமாவில் முக்கிய நடிகரும் வனிதாவின் தந்தையுமான விஜயகுமார் ஒதுக்கி வைத்துள்ளார். அவர் மட்டுமின்றி அவரின் குடும்பத்தினர் யாரும் அவரிடம் பேச்சுவார்த்தை வைத்து கொள்ள வில்லை. இருப்பினும் வனிதா விஜயகுமாரை எங்கையும் விட்டு கொடுத்ததில்லை.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் குடும்பத்துடன் எப்படியாவது ஒன்று சேர்ந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி சுற்றி வருகிறார். இந்நிலையில் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமாரின் மகள் தியாவுக்கு மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகளில் குடும்பத்தினர் தீவிரமாக இருந்து வருகின்றனர். மேலும் பந்தக்கால் நடும் விழா, சங்கீத் மற்றும் மெஹந்தி போன்ற பங்ஷன்கள் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
ஆனால் வனிதாவை யாரும் அழைக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து வீடியோ வெளியிட்ட வனிதா, “ஒட்டுமொத்த கூட்டமும் ஒரே இடத்தில் ஒன்று சேரும் போது, நீங்க தனியா சிங்கம் போல் இருந்தால், நீங்க எவ்வளவு பவர் புல் என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.