காதலுக்கு அப்புறம் குட் நியூஸ் சொன்ன பிக் பாஸ் அமீர் - பாவனி.., திருமண தேதியை அறிவித்த ஜோடி!!!காதலுக்கு அப்புறம் குட் நியூஸ் சொன்ன பிக் பாஸ் அமீர் - பாவனி.., திருமண தேதியை அறிவித்த ஜோடி!!!

பிக் பாஸ் அமீர் – பாவனி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் அமீர் – பாவனி. இந்த ஷோவில் இருக்கும் பொழுது அமீர் பாவனியை ஒருதலையாக காதல் செய்து வந்தார். இதையடுத்து அந்த ஷோவில் இருந்து வெளியேறிய இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் ஷோவில் கலந்து கொண்டு டைட்டில் அடித்தனர். அப்போது அமீர் தனது காதலை கூற பாவனி அதை ஏற்றுக்கொண்டார். இதன்பின் எப்போது திருமணம் என அமீர், பாவனி இருவரிடமும் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது வரை  அவர்கள் தங்களது திருமணம் குறித்து பேசாமல் இருந்து வந்த நிலையில் தற்போது, சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் திருமணம் தேதியை அறிவித்துள்ளனர். அதாவது அவர்களுடைய திருமணம்  இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க போவதாக அமீர் – பாவனி  கூறியுள்ளனர். அவர்களுடைய கல்யாணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. பலரும் தங்களது வாழ்த்துக்களையும் இந்த காதல் ஜோடிக்கு தெரிவித்து வருகிறார்கள்.

இடைநிலை ஆசிரியர் தேர்வர்கள்.., 20ம் தேதி வரை தான் டைம்.., தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *