
பீகார் மாநிலம்: ஹோட்டலில் திடீர் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு: பீகார் மாநிலத்தில் இருக்கும் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை முழுவதுமாக அணைத்தனர். மேலும் தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை பேசுகையில், ” தீயணைப்புத் அணைப்பதற்கு வீரர்கள் கடுமையாக வேலை செய்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

மேலும் நெரிசலான பகுதிகளில் இது மாதிரியான சம்பவங்கள் நடைபெற கூடாது என்பதற்காக தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி பேசுகையில், “ இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்