பீகாரில் வருகிற ஜூன் 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை: இந்தியாவின் மேற்கு மற்றும் வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் ஈவு இரக்கம் இல்லாமல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதியில் இருந்து வருகின்றனர். சொல்ல போனால் சிலர் மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்கின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பீகார் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் பிகார் மாநிலத்தில் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள மன்கவுல் நடுநிலைப் பள்ளியில் நேற்று 7 மாணவர்கள் வெயிலின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். உடனே அங்கிருந்த ஆசிரியர்கள் அவர்களுக்கு முதலுதவி செய்து மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அந்த ஏழு மாணவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர் . எனவே இது மாதிரியான சம்பவங்கள் திரும்ப நடக்க கூடாது என்பதற்காக பீகார் அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வருகிற ஜூன் 8ம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. school holiday news – bihar latest news – india recent news – students holiday – heat wave high
நீதிமன்ற உத்தரவை மீறி கார் ஓட்டிய TTF வாசன் கைது? அப்ப “மஞ்சள் வீரன்” படம் ட்ராப்பா?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
ஓட்டுநர் உரிம விதிகளில் முக்கிய மாற்றம்
வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை
கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
சட்ட கல்லூரியில் சேர வேண்டுமா?