வீடுகளில் கிளி உள்ளிட்ட பறவைகள் வளர்க்க பதிவு செய்ய வேண்டும் ! மீறினால் 7 ஆண்டுகள் சிறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !வீடுகளில் கிளி உள்ளிட்ட பறவைகள் வளர்க்க பதிவு செய்ய வேண்டும் ! மீறினால் 7 ஆண்டுகள் சிறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

வீடுகளில் கிளி உள்ளிட்ட பறவைகள் வளர்க்க பதிவு செய்ய வேண்டும். நமது வீடுகளில் வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளுக்கு லைசென்ஸ் வாங்குவது கட்டாயம் என கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் வீடுகளில் கிளி, மயில் வளர்த்தால் 7 ஆண்டு சிறை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அத்துடன் பறவைகள் வளர்ப்போர் அவசியம் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளாகவும், வணிக நோக்கிலும் பறவைகள் வளர்ப்பதில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் தற்போது வரைவு விதிகளில் வனத்துறை மாற்றம் செய்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 1,364 வகையான பறவை இனங்கள் உள்ளன. அந்த வகையில்194 வகை பறவை இனங்கள் உலக அளவில் அழியும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்று அழிவின் விளிம்பில் உள்ள பறவைகளை பாதுகாப்பதற்காக மத்திய அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து பறவைகளை கொண்டு வந்து வளர்ப்பவர்கள் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது பதிவு செய்வதற்கான வசதி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Baby Gender Reveal யூடியூபர் இர்ஃபானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் – நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை !

மேலும் சட்டப்படி அனுமதிக்கப்படும் சில வகை பறவைகளை வீடுகளில் வளர்க்கலாம். இவ்வாறு வீடுகளில் வளர்க்கப்படும் பறவைகள் குறித்த விபரங்களை அரசுக்கு மக்கள் தெரிவிக்க வேண்டும்.

மேலும் வீடுகளில் நாய் வளர்க்க உரிமம் பெறுவது போன்று பறவைகள் வளர்க்க விரும்பும் நபர்களும் உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும்.

அத்துடன் பதிவு செய்தவர்களுக்கு தனித்த அடையாள எண் வழங்கப்படும் என்று வனத்துறை உயரதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *