Home » செய்திகள் » பாஜக அண்ணாமலை அதிரடி கைது…, வெளியான ஷாக்கிங் தகவல்!!

பாஜக அண்ணாமலை அதிரடி கைது…, வெளியான ஷாக்கிங் தகவல்!!

பாஜக அண்ணாமலை அதிரடி கைது..., வெளியான ஷாக்கிங் தகவல்!!

கோவையில் நடந்த பேரணியில் பாஜக அண்ணாமலை அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தற்போது இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 

கைது:

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஊரு ஊராக சென்று மக்களை சந்தித்து வருகிறார். கடைசியாக நடந்த மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் டெபாசிட் இழந்தார். இதனால் தான் மக்களை நேரில் சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறார். அதன்படி இன்று  கோயம்பத்தூர், காந்திபுரம் பகுதியில், அனைத்து இந்து இயக்க கூட்டமைப்பு சார்பில் கருப்பு தின பேரணி நடைபெற்றது. இதில் அண்ணாமலை தலைமை வகித்தார். அவருடன் சேர்ந்து, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து, அந்த பேரணியில் பேசிய அண்ணாமலை, ” அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த காவல் துறையைக் கண்டித்தும், தமிழக அரசைக் கண்டித்தும் பேசினார். குறிப்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலினை நேரடியாக தாக்கி பேசினார். குறிப்பாக கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கார் குண்டு வெடித்தது. ஆனால் இதை முக ஸ்டாலின் சிலிண்டர் வெடிப்பு என்று கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, கருப்பு தின பேரணியில் ஊர்வலமாகச் செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு போலீஸ் தரப்பினர் அனுமதி தரவில்லை.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதன் காரணமாக,  அண்ணாமலை மற்றும் அவருடன் வந்தவர்களை போலீசார் கைது செய்தனர். சிறிதுநேரத்தில் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கைதாகினர். சில மணிநேரங்களில் கழித்து அனைவரையும் போலீசார் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

2025ல் ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் லீவு .., வெளியான முக்கிய அறிவிப்பு!!

2025 பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை .., மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

அரசு பேருந்து டிக்கெட் விலை திடீர் உயர்வு.., அரசு வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!

ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு ..,  காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்? தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top