உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு. நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக தேர்தலில் அதிக இடங்களை பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பின்னடைவு :
பாஜக தலைமையிலான தேசிய தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 271 இடங்களை தனிப்பட்ட கட்சியாக பாஜக பெறவில்லை. இதன் காரணமாக மத்தியில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.
மேலும் பாஜக பெரிதும் நம்பியிருந்த உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பாஜக குறைவான இடங்களை பெற்ற நிலையில் அதற்க்கு பொறுப்பேற்று தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சி பணிகளில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.
விஜய பிரபாகரனை திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டாரா? ஆதாரத்துடன் பேசிய பிரேமலதா விஜயகாந்த்!
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் 71 இடங்களில் வென்ற பாஜக தற்போது 31 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் உபி முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத்தை மாற்றுவது குறித்து பாஜக தலைமை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.