
பாஜக வேட்பாளர் கரண் பூஷனின் கார் மோதி சிறுவர்கள் உயிரிழப்பு: நாடாளுமன்ற மன்ற தேர்தல் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏழாவது கட்ட தேர்தல் வருகிற ஜூன் மாதம் 1ம் தேதி நடைபெற இருக்கிறது. கடைசி கட்ட தேர்தல் என்பதால் அரசியல் கட்சியினர் மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக வேட்பாளர் ஒருவர் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது, உத்தரபிரதேசம் கைசர்கஞ்ச் என்ற தொகுதியில் நிற்கும் பாஜக வேட்பாளரும், பாலியல் குற்றத்தில் சிக்கிய பிரிஜ் பூஷன் சிங்கின் மகனுமான கரண் பூஷன் சிங் சென்ற கார் திடீரென விபத்தில் சிக்கியது. அதாவது அவர் வந்த வாகனம் எதிர்பாராத விதமாக மூன்று சிறுவர் மீது மோதியது. இதில் இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு சிறுவன் மட்டும் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். அந்த சிறுவனின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கரண் பூஷன் சிங் அந்த காரில் இருந்தாரா? என்று எந்த தகவலும் உறுதிப்படுத்தாத நிலையில் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். பாஜக வேட்பாளர் கரண் பூஷனின் கார் மோதி சிறுவர்கள் உயிரிழப்பு – lok sabha election 2024 – election news – bjp party – BJP candidate Karan Bhushan Singh
மக்களவை தேர்தல் 2024: வாக்கு எண்ணும் பணியில் 1430 பேர் – மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு
வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை