பாஜகவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை தகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து திமுகவின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது
பாஜகவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை :
பாஜக ஆளும் மாநிலங்களில் வாழும் மக்கள் அன்றாட தேவைகளுக்கு கஷ்டப்படுவதாகவும் மேலும் பாஜக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கனிமொழி விமர்சனம் செய்தார். தமிழ்நாட்டில் விடியல் பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம் மற்றும் பெண்கள் உரிமை தொகை போன்ற திட்டங்களின் மூலம் பெண்கள் முன்னேற்றத்திற்கு துணையாக திராவிட மாடல் ஆட்சி இருப்பதாக கனிமொழி தெரிவித்தார்.