மோடி ராகுலுக்கு திடீரென நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஒருவர் மீது மற்றொருவர் கடும் வார்த்தைகளில் விமர்சித்து வருகிறார்கள்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
குறிப்பாக ராஜஸ்தானில் நடைபெற்ற பரப்புரையின் போது பிரதமர் முஸ்லிம்களுக்கு எதிராக பேசியதாக காங்கிரஸ் கடும் விமர்சனத்தை முன் வைத்தது. அதே போல, நாட்டு பெண்களின் தாலியை காங்கிரஸ் பறித்துவிடும் என்று மோடியும் பெரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்நிலையில் இரு கட்சிகளும் பேசிய பேச்சை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ” தலைவர்களின் பேச்சு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு, வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு” தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.