
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தமிழ்நாட்டில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானதாக தகவல் வெளியாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ரூ.4 கோடி ரூபாய் பறிமுதல் :
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதியன்று உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் :
இந்நிலையில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த 4 கோடி ரூபாய் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக பிடிபட்ட மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது – சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை !
இந்நிலையில் ரூ.4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணைக்கு பாஜகவின் தமிழக சட்டமன்ற குழு தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் இன்று சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அந்த வகையில் அவரிடம் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகள் :
மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய திட்டம் ?
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு