ஜனவரி 2025ல் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கையில், வரும் 2025 ஜனவரி மாத இறுதிக்குள் புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்பட்டு விடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 2025ல் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பாஜக தேசிய தலைவர் நியமனம்:
தற்போது பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா பதவி வகித்து வருகிறார். ஆனால் இவரது பதவிக் காலம் ஏற்கனவே முடிவடைந்து விட்டநிலையில் இருப்பினும் அடுத்தடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களால் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போது வரை தலைவராக தொடர்கிறார்.
ஜனவரியில் புதிய தலைவர்:
இதுதொடர்பாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கையில், வரும் 2025 ஜனவரி மாத இறுதிக்குள் புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்பட்டு விடுவார். மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் முடிவடைந்துவிடும். அதன்பிறகு தேசிய தலைவர் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைவு.., உலக தலைவர்கள் இரங்கல்!!
பாஜகவின் புதிய தலைவர் இவரா?
பாஜகவின் தேசிய தலைவரை தேர்வு செய்யும் பணி ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. அந்த வகையில் இதில் 6 பேரின் பெயர்கள் முக்கியமாக அடிபடுகின்றன. பாஜக பொதுச்செயலாளர் வினோத் தவ்டே, சுனில் பன்சால், மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், குஜராத்தை சேர்ந்த சஞ்சய் ஜோஷி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
சமீபத்திய செய்திகள்:
PSLV – C60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம் – இஸ்ரோ அறிவிப்பு!
அரசு பேருந்தில் POLICE இலவசமாக பயணிக்கலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!
2024ன் கடைசி நாளன்று (31.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள்! TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!
2025 இல் இத்தனை ஞாயிற்றுக்கிழமையா! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே
புதுமை பெண் திட்டம் 2024.., இனி இந்த மாணவிகளுக்கும் ஆயிரம் ரூபாய்.., லட்டு மாதிரி வெளியான நியூஸ்!!