விளம்பரத்திற்காக ரூ 3641 கோடி செலவு செய்த பாஜக கட்சி: மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. அதன் முதற்கட்டமாக நேற்று தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் சிறப்பாக நடந்து முடிந்தது. இருப்பினும் கடந்த தேர்தலை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது நடப்பாண்டு தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் பல்வேறு கட்சியினர் விளம்பரம் செய்தது எல்லாம் வீண் தான் என்று தேர்தல் அதிகாரி கூறி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கட்சி விளம்பரத்திற்காக செய்த செலவு குறித்து RTI தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது பாஜக தலைவர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் தொலைக்காட்சி விளம்பரத்திற்கு கிட்டத்தட்ட 2974 கோடி செலவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி எஸ்.எம்.எஸ் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்ய 667 கோடி செலவு செய்துள்ளது. மேலும் பத்திரிகை, பொது இடங்களில் பேனர்கள், லித்தோ, ரயில்வே டிக்கெட்டில் உள்ளிட்ட விளம்பரத்திற்கு பாஜக செய்த செலவு குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. எனவே கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கட்சி விளம்பரத்திற்காக சுமார் 3641 கோடி செலவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்று RTI தெரிவித்துள்ளது