பாஜக ராஜீவ் சந்திரசேகருக்கு வந்த புதிய சிக்கல்
திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகரின் தேர்தல் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்தது. அதன்படி ராஜீவ் சந்திரசேகரன் தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் சொத்து மதிப்பு, அவரின் உண்மையான சொத்து மதிப்புடன் பொருந்திப்போகவில்லை தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்திருந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பிரமாணப்பத்திரத்தில் ஏதாவது தவறான தகவல்கள் இருக்கிறதா என்று சரி பார்க்குமாறு மத்திய நேரடி வரி வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அப்படி ராஜீவ் சந்திரசேகரன் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் ஏதாவது தவல்கள் மறைக்கப்பட்டிருந்தாலோ அல்லது தவறாக தெரிவிக்கப்பட்டிருந்தாலோ, அவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமோ விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.