நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் பாஜக நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்சோ வழக்கு
மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், மக்களின் வாக்குகளை பெற அரசியல் கட்சியினர் தீவிரமாக இருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவராக பதவி வகித்து வருபவர் தான் எம்.எஸ்.ஷா. அவர் அரசியலை தாண்டி திருமங்கலம் பகுதியில் இருக்கும் பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
பாலியல் வன்கொடுமை
இந்நிலையில் அவர் மீது ஒருவர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் 15 வயதாகும் தனது மகளை எம்.எஸ்.ஷா அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். அதற்கு என் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். பைக். பணம் உயர்தர ஆடைகள் என சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக என் மனைவி எனது மகளை எம்.எஸ்.ஷாவுடன் விடுதிக்குள் அனுப்பி வைத்து இந்த கேவலமான வேலைக்கு துணை நின்றுள்ளார் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து எம்.எஸ்.ஷா மீதும், அவரது மனைவி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு. விசாரணை நடத்தி வருகின்றனர்.