
பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்த சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், முதற்கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் அரசியல் கட்சியினர் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகின்றனர். இதனை தொடர்ந்து அண்ணாமலை நேற்று சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பரப்புரையில் ஈடுபட்டனர். அவருடன் சேர்ந்து பாஜக உறுப்பினர்களும் பிரச்சாரம் செய்து வந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் அண்ணாமலை மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் இரவு 10 மணி வரை தான் மக்களின் வாக்குகளை பெற பரப்புரையில் ஈடுபட வேண்டும். ஆனால் நேற்று அண்ணாமலை நேற்றிரவு 10.30 மணிக்கு பின்னரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த அப்பகுதியில் இருந்த திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.