
தமிழகத்தில் பாஜக RCB போல தோற்றுக்கொண்டே இருக்கும். இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன, நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பாஜக RCB போல தோற்றுக்கொண்டே இருக்கும்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பாஜக குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் விமர்சனம் :
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மேலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை. இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டில் நாங்கள் தான் எதிர்க்கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என்று மீண்டும் அதிமுக கட்சியை சீண்டினார்.
நீட் தேர்வு முடிவுகள் குறித்த சர்ச்சை – தேசிய தேர்வு முகமை விளக்கம் !
இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தை பொறுத்தவரை பாஜக RCB அணி போல தோற்றுக்கொண்டே இருக்கும் என்றும், அதிமுக CSK அணி போன்று பல வெற்றிகளை குவித்து இன்னும் பல வெற்றிக்காக காத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.