நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகர்: தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாளை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. மேலும் இந்த தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை வரும் ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் மக்களுக்கு பரிசு பொருட்கள், பணம், தங்க நகைகள் என கொடுக்காமல் இருப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்து வருகிறார். இப்படி இருக்கையில் பாஜக பிரமுகர் நேரடியாக மக்கள் கையில் பணம் கொடுத்து வசமாக சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழகத்தில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வசந்த ராஜன் என்பவர் தனக்கு ஆதரவாக வாக்களிக்க கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் இருக்கும் டீ கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதிமணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார். இந்த தகவலை அறிந்த தேர்தல் பறக்கும் படையினர் உடனே சம்பவ இடத்திற்கு சென்று அவரை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப் பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதே போல் மற்ற தொகுதிகளிலும் அவர் பணம் கொடுத்துள்ளாரா என்று விசாரணை செய்து வருகின்றனர்.