தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனாக்கானும் காலங்கள் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிளாக் பாண்டி. இதை தொடர்ந்து கில்லி, ஆட்டோகிராப், அங்காடி தெரு, உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் சூரியுடன் சேர்ந்து அவர் நடித்த படங்களில் கவுண்டமணி செந்தில் காம்போவை திரும்ப பார்த்த மாதிரி இருப்பதாக பலரும் கூறினார்கள். ஆனால் தற்போது அவர் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் நிலையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் தன்னால் முடிந்த அளவுக்கு யாருக்கும் தெரியாத அளவு மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அதுமட்டுமின்றி எஸ்டேட் என்ற பெயரில் ஸ்டுடியோ ஆரம்பித்த நிலையில் குறும்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதற்கிடையில் அவர் எம்பிஏ படித்த உமேஸ்வரி பத்மினி என்ற பெண்ணை கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது மனைவியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.