பாலிவுட் நடிகர் கோவிந்தா விமான நிலையத்திற்கு செல்ல இருந்த நிலையில் அவர் மீது வீட்டில் இருந்த துப்பாக்கி குண்டு பாய்ந்தது என்று மேலாளர் தெரிவித்துள்ளார்.
நடிகர் கோவிந்தா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது
பாலிவுட் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் தான் கோவிந்தா. இவர் கிட்டத்தட்ட 165-க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சினிமாவில் வெற்றி வாகை சூடி வந்த அவர், கடந்த 2004-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு , அதில் வெற்றியும் பெற்று கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் எம் பி யாக பதவி வகித்தார்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர், தற்போது சிவசேனா கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இன்று அவருடைய வீட்டில் துப்பாக்கி வெடித்ததில் கோவிந்தாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவருடைய மேலாளர் பேசுகையில்,” நாங்கள் இன்று கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள காலை 6 மணி விமானத்தில் செல்ல இருந்தோம்.
ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி – என்ன ஆனது? முதல்வர் போட்ட பதிவு!
அதற்காக ஏற்பாடுகளுக்காக நான் முன்கூட்டியே விமான நிலையத்துக்கு சென்று விட்டேன். கோவிந்தா மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். அவர் விமான நிலையத்துக்கு புறப்படும் போது, அந்த சமயத்தில் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி தவறுதலாக கீழே விழுந்ததில் வெடித்துள்ளது. அப்போது வெடித்த குண்டு நல்வாய்ப்பாக கோவிந்தா காலில் பாய்ந்தது” எனத் தெரிவித்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறியுள்ளார்.
அக்டோபர் 1 முதல் சிலிண்டர் விலை ரூ1903 ஆக உயர்வு
உதயநிதியின் செயலாளராக பிரதீப் ஐஏஎஸ் நியமனம்?
வானிலை பற்றி தெரிந்து கொள்ள TN Alert செயலி
திருப்பதி லட்டு விவகாரம் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்