பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகிப் பால்கே விருது - மத்திய அரசு அறிவிப்பு !பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகிப் பால்கே விருது - மத்திய அரசு அறிவிப்பு !

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் 70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1976-ம் ஆண்டு பெங்காலியில் வெளியான ‘மிரிகயா’ என்ற படத்தின் மூலம் மிதுன் சக்கரவர்த்தி சினிமா துறைக்கு அறிமுகமானார். மேலும் இவர் கொல்கத்தாவை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. Bollywood Actor Mithun Chakraborty to get Dadasaheb Phalke Award

தற்போது 70 வயதாகும் மிதுன் சக்ரவர்த்தி நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்தி, பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் தவெக கொடி விவகாரத்தில் தலையிட முடியாது – இந்திய தேர்தல் ஆணையம் பதில் !

இந்நிலையில் சினிமா துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இதையடுத்து வரும் அக்.8ந்தேதி நடைபெறும் 70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *