சூப்பர் ஸ்டார்
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அமிதாப் பச்சன். 81 வயதாகும் இவர் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இவர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அவருடைய மகனான அபிஷேக் பச்சனும், மருமகளான ஐஷ்வர்யா ராயும் தற்போது பாலிவுட்டில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த அம்பானி வீட்டு கல்யாணத்தில் கும்பமாக கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது அமிதாப் பச்சனுக்கு காலில் ஆஞ்சியோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை கேட்ட ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர். மேலும் இவர் தற்போது பல கோடி ரூபாயில் உருவாகி வரும் கல்கி 2898 ஏடி என்ற படத்தில் கமலுடன் சேர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.