முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா மற்றும் சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். அங்கு நடக்க இருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க போகிறார் என்று கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்
இதனை தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்துப் பேச இருக்கிறார். இந்த சூழலில் தற்போது முதல்வர் முக ஸ்டாலின் சென்ற விமானத்துக்கு சில மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அதிகாரிகள் பதற்றமடைந்தனர். bomb threat to mk stalin flight
அதாவது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்த விமானம் புறப்பட்டு சென்ற நிலையில் தான் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலை அதிகாரிகள் பார்த்ததாக கூறப்படுகிறது. இங்கே இருந்து கிளம்பிய விமானம் முதலில் துபாயில் இறங்க இருந்த நிலையில் அடுத்த 4 மணி நேரத்திற்கு அதிகாரிகள் உச்சகட்ட பதற்றத்துடன் இருந்து வந்தனர். tamilnadu cm news
Also Read: மதுரையில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற காலக்கெடு – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இதனை தொடர்ந்து துபாயில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதையடுத்து காவல்துறை மோப்ப நாய்கள் வைத்து தீவிரமாக சோதனை செய்தனர். அதன்பிறகே விமானத்தில் பாம் இருப்பதாக வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டதால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். இருந்தாலும் இந்த செய்தி வெளியாகி திமுகவினர் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி
விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்?
ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார்