நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி குறித்து தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மக்களவை தேர்தல்
மக்களவை பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதற்கட்டமாக வருகிற ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் படு தீவிரமாக இருந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் மக்களின் வாக்குகளை பெற அரசியல் கட்சியினர் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் மொத்தம் 950 பேர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளதால் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கிவிட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி குறித்து முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தற்போது தமிழகத்தில் உள்ள வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி அதிகாரிகள் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். மேலும் இந்த பணி வருகிற 14ம் தேதியுடன் நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.