போடு தகிட தகிட.., 44 வயதில் இமாலய சாதனை பட்டியலில் இணைந்த CSK அணி வீரர்.., வெற்றிக்கு வயது தடையல்ல!!போடு தகிட தகிட.., 44 வயதில் இமாலய சாதனை பட்டியலில் இணைந்த CSK அணி வீரர்.., வெற்றிக்கு வயது தடையல்ல!!

கிரிக்கெட் போட்டியில் சிறந்த லெக் ஸ்பின்னர் பவுலராக  வலம் வந்தவர் தான்  இம்ரான் தாஹிர்(44). இவர் தற்போது நடைபெற்று வரும் ‘வங்கதேச பிரிமீயர் லீக்’ தொடரில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய  ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இம்ரான் தாஹிர். இதன் மூலம் டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி உலக அளவில் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

அந்த லிஸ்டில் 624 விக்கெட்டுகளை எடுத்து டுவைன் பிராவோ முதல் இடத்திலும், 556 விக்கெட்டுகளை எடுத்து ரஷித் கான் 2ம் இடத்திலும், 532 விக்கெட்டுகளை எடுத்து சுனில் நரைன் 3ம் இடத்தை பிடித்துள்ளார். இந்த வரிசையில் 4வது இடத்தை பிடித்து இமாலய சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கீ பவுலராக செயல்பட்ட இம்ரான் தாஹிர் 2018 மற்றும் 2021 ஐபிஎல் கோப்பைகளை வென்ற சென்னை அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடேங்கப்பா.., பிக்பாஸ் சனம் ஷெட்டியின் காதலனா இவரு?.., காதலர் தினத்தில் வெளியான முக்கிய போட்டோ!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *