டெங்கு காய்ச்சல் பரவல்
உலகின் பல்வேறு முக்கிய நாடுகளில் டெங்கு காய்ச்சல் மிக தீவிரமாக பரவி வருகிறது. பரவலை தடுக்க அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வந்த போதிலும் தொடர்ந்து பல இடங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பிரேசில் நாட்டில் தான் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு மக்களுக்கு சில கோரிக்கைகளை முன் வைத்து வலியுறுத்தியுள்ளது. அதாவது பொது மக்கள் உடனே டெங்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 15 லட்சத்து 83 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதில் தற்போது 12 ஆயிரத்து 652 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த டெங்கு காய்ச்சலால் அந்த நாட்டில் கிட்டத்தட்ட 391 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 854 இறப்புகள் விசாரணையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு விகிதம் 1,00,000 மக்களுக்கு 757.5 ஆக இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கொஞ்சம் பீதியில் இருந்து வருகின்றனர்.