உலகத்தில் பல இடங்களில் வினோதமான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒரு சம்பவம் பிரேசில் நாட்டில் அரங்கேறி உள்ளது. அதாவது பிரேசில் நாட்டை சேர்ந்த மேடியஸ் ஃபேசியோ(21) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜெனிரோ பீச்சில் புத்தாண்டை கொண்டாடி வந்துள்ளார். அப்போது மேடியஸ் ஃபேசியோ தலையில் வேகமாக ஒன்று தாக்கியதில் அவருக்கு அந்த சமயம் சுயநினைவு சற்று தளர்ந்த நிலையில், ஏதோ கல் தான் தாக்கி இருக்கும் என்று நினைத்து ஐஸ் கட்டியை வைத்து வலித்த இடத்தில் தேய்த்து, மீண்டும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
கிட்டத்தட்ட 4 நான்கு நாட்கள் கொண்டாட்டத்திற்கு தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளார். இதனை தொடர்ந்து அவரின் ஒரு கை பகுதியில் வலி அதிகமாக எடுத்த நிலையில், மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்த்ததில் அவரின் தலையில் ஒரு துப்பாக்கி குண்டு(9MM புல்லட்) இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன் பின்னர் அறுவை சிகிச்சையின் மூலம் அந்த 9MM புல்லட்டை எடுத்துள்ளனர். அதை போலீசிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸ் விசாரித்த போது, மேடியஸ் ஃபேசியோ என்னை கல் தான் தாக்கி இருக்கும் என்று நினைத்தேன். இப்படி நடத்திற்கும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. என்று கூறியுள்ளார். மேலும் மேடியஸ் ஃபேசியோ சொன்ன பகுதியில் எந்த துப்பாக்கி சூடு நடக்கவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.