தாய்ப்பால் விற்பனை விவகாரம்: இன்றைய சமுதாயத்தில் வயிற்று பொழப்புக்காக பெரும்பாலான மக்கள் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். சொல்லப்போனால் பணத்துக்காக தாய் பால் விற்கும் அளவுக்கு காலம் மாறிவிட்டது. இது குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தாய்ப்பால் விற்பனை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை தமிழ்நாடு முழுவதும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதன்படி கண்காணிக்க தமிழ்நாடு முழுவதும் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள், தாய்ப்பால் விற்பனை தொடர்பான புகார்களை 9444042322 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. சமீபத்தில் கூட சென்னை மாதவரத்தில் மருந்து கடை ஒன்றில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பாலை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த நிலையில் உணவுத்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது. selling breast milk – breast milk issue – seithikal news – general news
புனே கார் விபத்து விவகாரம் : ரத்த மாதிரியை மாற்றி தில்லுமுல்லு செய்த இளைஞரின் தாயார் கைது!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
சவுக்கு சங்கர் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்
இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் சிக்கல்?
சேலம் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா
அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை