
Breaking News: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி: தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி தான் அதிக வாக்குகளில் 40க்கு 40 தொகுதிகளில் இடத்தை பிடித்தது. இந்நிலையில் பிரிட்டனில் நடைபெற இருக்கும் தேர்தல் ஒன்றில் தமிழர்கள் வேட்பாளராக நிற்கும் சுவராஸ்யம் அரங்கேறியுள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி
அதாவது பிரிட்டனில் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் வெற்றி பெற்று பிரதமராக பதவி வகித்து வந்த நிலையில் தற்போது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவருடைய பதவி காலம் நிறைவடைய இருக்கிறது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
எனவே அவரை தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் விதமாக தேர்தல் நடத்தப்பட இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை எட்டு தமிழர்கள் களம் காண்கின்றனர்.
Also Read: கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் இல்லை – சிபிசிஐடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
அதன்படி கமலா குகன், உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன், டெவினா பால் ஆகியோர் பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் நிற்கிறார்கள். மேலும் கடந்த 15 வருடங்களாக கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்த வந்த நிலையில், இந்த ஆண்டு கண்டிப்பாக தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.