Home » செய்திகள் » BSNL நிறுவனம் அறிவித்த சூப்பர் ஆஃபர் – 395 நாள்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டம் !

BSNL நிறுவனம் அறிவித்த சூப்பர் ஆஃபர் – 395 நாள்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டம் !

BSNL நிறுவனம் அறிவித்த சூப்பர் ஆஃபர் - 395 நாள்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டம் !

தற்போது இந்தியாவில் முக்கிய டெலிகாம் நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டண உயர்வை தொடர்ந்து BSNL நிறுவனம் அறிவித்த சூப்பர் ஆஃபர் தொடர்பான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களாக செய்யப்பட்டு வருவது ஏர்டெல், வோடாபோன், ஜியோ போன்ற டெலிகாம் நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன் தங்களது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த திடீர் கட்டண உயர்வு பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சயை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இந்த மூன்று நிறுவனங்களும் ஒரே நேரத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது பேசுபொருளானது.

இந்நிலையில் இந்தியாவின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL மற்ற டெலிகாம் நிறுவனங்களின் கட்டண உயர்வை பயன்படுத்தி குறைந்த விலையில் பல சேவைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் BSNL நிறுவனம் 5ஜி சேவையை தொடங்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு கொண்டு மறுபுறம் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைக்க புதிய திட்டங்களை தற்போது அறிமுகப்படுத்தி வருகிறது.

5 கதவுகள் கொண்ட Mahindra Thar போட்டோக்கள் கசிவு – எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள்!!

அதன் படி 395 நாள்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.2,399 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தினமும் அதிவேக 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் BSNL tunes உள்ளிட்ட சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ரீசார்ஜ் சேவைகளை பயன்படுத்தி BSNL நிறுவனம் தங்கள் பயனர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top