BSNL-லின் புதிய லோகோ வெளியீடு - 7 புதிய சேவைகள் தொடக்கம் !BSNL-லின் புதிய லோகோ வெளியீடு - 7 புதிய சேவைகள் தொடக்கம் !

தற்போது BSNL -லின் புதிய லோகோ வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 7 புதிய சேவைகளை மத்திய அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசிற்கு சொந்தமான தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான BSNL தற்போது பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது மக்களிடம் அதிக பயன்பாட்டில் உள்ள ஏர்டெல், வோடபோன், ஜியோ என முக்கிய சேவை நிறுவனங்களுக்கு மத்தியில் தற்போது BSNL நிறுவனம் மீண்டும் தனது புதிய திட்டங்களின் மூலம் புத்துயிர் பெற்று வருகிறது.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்து டெலிகாம் நிறுவனங்களை போல 5ஜி சேவை வழங்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விசாட் நிறுவனத்துடன் இணைந்து நேரடியாக செயற்கைகோள் மூலமாக சேவைகளை பெரும் அடிப்படையில் செய்யப்பட்ட சோதனையில் தற்போது வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் எளிய முறையில் செயற்கைகோள் மூலமாக சேவைகளை பெறவும், அத்துடன் எதிர்காலத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் BSNL நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து உபயோகப்படுத்தப்பட்டு வந்த அதன் லோகோ வானது தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் BSNL -லின் புதிய லோகோ மற்றும் 7 புதிய சேவைகளை மத்திய அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பேம் ஃப்ரீ நெட்வொர்க்,

பிஎஸ்என்எல் ஐபிடிவி,

டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி,

பைபர் டு தி ஹோம் பயனர்களுக்கு தேசிய Wi-Fi ரோமிங் சேவை,

என்கிரிப்டட் கம்யூனிகேஷன் ஃபார் டிஸாஸ்டர்ஸ்,

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் – அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை!

மேலும் நிலக்கரி சுரங்கத்துக்கு பிரத்யேக 5ஜி நெட்வொர்க் வழங்கும் திட்டம் போன்றவை இதில் அடங்கும். இதனை தொடர்ந்து ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க் மூலம் பயனர்கள் மோசடியாளர்களிடம் இருந்து தப்பிக்க உதவுகிறது.

மேலும் டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி என்ற வசதியின் மூலம் பயனர்கள் தடையில்லா நெட்வொர்க் இணைப்பை சாட்டிலைட் மற்றும் நிலத்தில் உள்ள மொபைல் நெட்வொர்குகள் மூலம் பெறலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *