Breaking News: நெல்லை பேருந்துகளில் ஜாதி பாடல்கள் போட கூடாது: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாணவர்களிடையே சாதி ரீதியான மோதல்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பேருந்து பஸ்களில் மேல் ஏறி அடாவடித்தனம் செய்து வந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் காவல்துறை தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உடன் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். அந்த கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை பேருந்துகளில் ஜாதி பாடல்கள் போட கூடாது
அதன்படி நெல்லை மாநகர பஸ்களில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்ப கூடாது என காவல்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் மாணவர்களுடைய ஏற்படும் மோதல்களை தடுக்கலாம் என்று தான் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. police
Also Read: கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விவகாரம் – நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் – ஐஎம்ஏ அதிரடி அறிவிப்பு!
மேலும் காவல்துறையின் உத்தரவை மீறி தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பு செய்தால் அந்த பஸ்சின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. Tirunelveli district
விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்
ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ்
சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்