மண்ணை கவ்வியது  Byju's சாம்ராஜ்யம்…, கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பைஜூஸ் நிறுவனர்  பெயர்?மண்ணை கவ்வியது  Byju's சாம்ராஜ்யம்…, கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பைஜூஸ் நிறுவனர்  பெயர்?

பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ.17,545 கோடியாக ($2.1 பில்லியன்) இருந்தது. இன்று அவரது சொத்து மதிப்பு பூஜ்யமாக சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மதிப்புமிக்க ஸ்டார்ட்-அப்களில் ஒன்றாகவும்,  புகழ்பெற்ற எட்டெக் நிறுவனமாக விளங்கிய தான் பைஜூஸ். இந்த நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு ரவீந்திரன் என்பவரால் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து வெவ்வேறு பகுதிகளில் பிரான்சை ஓப்பன் செய்து கடந்த 2020ம் ஆண்டு பெரிய நிறுவனமாக உருவெடுத்தது. அதாவது கொரோனா காலத்தில் பலரும் ஆன்லைனில் கல்வி பயின்றதால், பைஜூஸ் நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்தது.

ஆனால் கடந்த சில வருடங்களாக பல்வேறு சிக்கல்களில் சிக்க தொடங்கியது. குறிப்பாக பணி நீக்கம், வருவாய் இழப்பு, கடன் சுமை, கணக்கு முறைகேடுகள், தவறாக நிர்வாக அணுகுமுறை மற்றும்  அடுத்தடுத்து பணியாளர்கள் விலகல் என அடுத்தடுத்து பெரிய சிக்கல்களை சந்தித்தது. இதனால் பண ரீதியாக பின்னடைவை சந்தித்த இந்நிறுவனம் எல்லா இடங்களிலும் உள்ள ஆபீஸ்களை இழுத்து மூடியது. இந்நிலையில் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ.17,545 கோடியாக ($2.1 பில்லியன்) இருந்தது. இன்று அவரது சொத்து மதிப்பு பூஜ்யமாக சரிந்துள்ளது.

பள்ளி வாகனங்களுக்கு புது கட்டுப்பாடு…, நாளை வரை தான் கெடு.., பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *