CAA எதிரொலி
மக்களவை தேர்தல் குறித்த அறிக்கை விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், கட்சி தலைவர்கள் கூட்டணி தொடர்பாக பேசி வருகின்றனர். மேலும் பாஜக கட்சி மக்களுக்கு ஒரு சில திட்டங்களை அமல் படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டு வரப்பட்டது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன. இதனால் அப்போது அந்த சட்டம் நிறுத்தப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் பாஜக அரசு நேற்று முதல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. தற்போது இது குறித்து பெரிய சர்ச்சைகள் போராட்டங்கள் மீண்டும் வெடிக்க தொடங்கி விட்டன. மேலும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாம் மாநிலம் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாணவர்கள் மாணவர் அமைப்புகள் டார்ச்லைட் பேரணி, சத்தியாகிரகம் உள்ளிட்ட போராட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.