Healthy Lunch Box: பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முட்டைக்கோஸ் அரிசி சாதம் செய்து தரலாம். தாய்மார்கள் இதை ஒரு முறை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். பின்னர் வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பே இல்லை.
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ்-100 கிராம்
பொடியாக நறுக்கிய கேரட் – 50 கிராம்
நறுக்கிய குடைமிளகாய் 2 மேஜைக் கரண்டி
ப்ரெஷ் பட்டாணி – 2 மேஜைக் கரண்டி (வேக வைத்தது)
வடித்த சாதம் – 1கப்
எண்ணெய் 1/2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய்-1
பெரிய வெங்காயம் – 1/2
உப்பு-தேவையான அளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
பொடித்த பட்டை, கிராம்பு – 1\4 டீஸ்பூன்.
தமிழகத்தில் நாளை (10.01.2025) மின்தடை பகுதிகள்! சென்னை முதல் கன்னியாகுமரி வரை பவர் கட் இடங்கள்!
செய்முறை:
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், மஞ்சள் தூள், பொடித்த பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின்பு பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ், கேரட், குடை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். கூடவே வேக வைத்த பட்டாணியை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் வடித்த சாதத்தைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். சுவையான முட்டைக்கோஸ் அரிசி சாதம் தயார்.
குறிப்பு:
காய்கறிகளை குழைய வேக வைக்காமல், பொடியாக நறுக்கி நன்கு வதக்கினாலே போதும் சத்துக்களும் வீணாகாது. வைட்டமின் சி, கே, பி6 நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏற்றது.
இன்றைய முக்கிய செய்திகள் Latest News
திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி.., சொர்க்க வாசல் இலவச டோக்கன் விநியோகத்தில் ஏற்பட்ட விபரீதம்!
இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் .. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
மீண்டும் இந்திய அணியின் கேப்டனாகும் விராட் கோலி.., ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் ஓபன் டாக்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை.., என்ன காரணம் தெரியுமா?