கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகள் நூல் போலியானது ! தமிழக ஆளுநர் ரவி ஆளும் திமுக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போடுவது, தமிழக அரசு தயாரித்து தரும் ஆளுநர் உரையை சட்டமன்றத்தில் வாசிக்காமல் புறக்கணிப்பது என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார்.
ஆளுநர் ஆர்.என். ரவி சர்ச்சை பேச்சு :
அதனை தவிர திமுகவையும் அதன் கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். திராவிடம் என்ற ஒன்று கிடையாது என்று பேசுவது, தமிழ்நாடு என்று அழைப்பதை விட தமிழகம் என்று குறிப்பிட்டால் சரியாக இருக்கும் என்று கூறுவது. மேலும் சனாதனத்திற்கு ஆதரவாக பேசி திமுகவையும் அதன் கொள்கைகளையும் கொடுமையாக விமர்சிப்பது என்று ஆளும் திமுக அரசிற்கும் ஆளுநருக்கும் இடையில் ஏற்படும் போதல் போக்கு நாளுக்கு நல்ல அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அவ்வாறு அதற்க்கு இன்னும் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என். ரவி மேலும் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
இவ்வளவு ஆடம்பர கொண்டாட்டம் தேவையா ? பிரபலங்கள் யாருக்கும் வெட்கமே இல்லையா – அம்பானி வீட்டு திருமணத்தை விமர்சித்த பிரசாந்த் பூஷன் !
கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகள் நூல் போலியானது :
அவர்கூறியதாவது ஜி.யு. போப் மற்றும் கால்டுவெல் ஆகிய இருவரும் பள்ளிப்படிப்பை கூட முடியாதவர்கள். மேலும் கால்டுவெல் திராவிட மொழிகள் குறித்து எழுதிய நூல்கள் அனைத்தும் போலியானது என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இவ்வாறு ஆளுநர் ஆர்.என். ரவி திமுகவின் அடிப்படை கொள்கைகள் மீதும் சித்தாந்தங்கள் மீதும் இது போன்று தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.