காலியான இடத்தில் லோன் வாங்க வேண்டுமா: நம்மில் பலருக்கும் பெரிய கனவாக இருந்து வருவது தனக்கென்று ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பற்றி தான். அதற்காக 22 வயதுக்கு மேல் இளைஞர்கள் அயராமல் உழைத்து வருகின்றனர். எப்படியாவது ஒரு வீட்டை கட்டியே தீருவோம் என்று கங்கணம் கட்டி சுற்றி வருகிறார்.
இது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் வீடு கட்டுவதற்கு முன்னர் நமக்கு தேவைப்படுவது காலியான நிலம். ஆனால் சில அந்த காலி இடத்தை வாங்குவதற்கு தொடர்ந்து பல மாதங்கள் சேர்த்து வைத்து தான் வாங்குகிறார்கள். இப்படி மொத்தமாக பணம் புரட்ட முடியாமல் தவிக்கும் நபர்கள், பணம் சேர்க்க முடியாதவர்கள் மனை கடன்( Plot Loan) வாங்குகிறார்கள்.
இருப்பினும் எல்லா வங்கிகளிலும் வீட்டு கடன் கொடுக்க முன் வருகிறார்கள்.ஆனால் நிலத்திற்கு கடன் கொடுக்க முன் வருவதில்லை. அதற்கு காரணம் இந்த மனையில் அதன் உரிமையாளர் வசிப்பதில்லை என்பதால் அதன் மீதான பிடிமானம் குறைவாக இருக்கிறது என்பதாகும். எனினும் பல முன்னணி வங்கிகளும் வீட்டு வசதி நிறுவனங்களும் மனைக் கடனை வழங்கி வருகின்றன.
காலியான இடத்தில் லோன் வாங்க வேண்டுமா
அப்படி வீட்டு கடனை வாங்க தேவையான ஆவணங்கள் என்னென்ன?
- நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் அடையாள அட்டை.
- 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
- கடன் வாங்குபவரின் அடையாள சான்று(வாக்காளர் அடையாள அட்டை /பாஸ்போர்ட்/ஓட்டுநர் உரிமம்/ பான் அட்டை ஆகிய ஏதாவது ஒன்றின் நகல் இருக்க வேண்டும்)
- வசிப்பிட சான்று(சமீபத்திய தொலைபேசி பில்கள்/ மின்சாரக் கட்டணம் சொத்து வரி ரசீது/ பாஸ்போர்ட்/வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஏதாவது ஒன்றின் நகல் இருக்க வேண்டும்)
- சம்பளதாரர்கள் எனில், வேலை பார்க்கும் நிறுவனத்திடமிருந்து சம்பள சான்று.
- சுய தொழில் செய்பவர்கள் எனில் வணிக முகவரிக்கான சான்று மற்றும் ஆடிட்டரின் வருமான சான்று.
- கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கி கணக்கு புத்தகத்தின் அறிக்கை.
- கடந்த இரு நிதியாண்டின் படிவம் 16 அல்லது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான ஆதாரம்.
- தற்போது உள்ள சொத்து மற்றும் கடன்களின் விவரம்.
Also Read: தமிழக பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் – 18 ஆயிரத்தை அள்ளி கொடுக்கும் அரசு – பெறுவது எப்படி?
இவற்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?
மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்
டீ குடித்தால் தலைவலி நீங்குமா?
விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா